அரசு பள்ளியில் மாணவர்குழு தொடக்கம்
- மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை திறம்பட செய்ய வேண்டும்.
- 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை கலெக்டர் பார்வையிட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பொறக்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்குழுவினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.மேலும் இந்த குழுவில் இடம் பெறும் மாணவ மாணவிகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை திறம்பட செய்து பள்ளியின் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என மாணவ மாணவர்களுடைய கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ஜெயந்தி,வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர்,ஒன்றிய குழு துணை தலைவர் திருமேனி,ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி,பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, திருக்கண்ணபுரம் வருவாய் ஆய்வாளர் ரம்யா மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து திருக்கண்ண புரம் அரசினர் மேல்நி லைப்பள்ளியில் பள்ளிப்பா ர்வை திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு மாண வர்களுக்கு வேதியியல் பாடம் எடுப்பதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.