நெல்லை அருகே இன்று அதிகாலை சம்பவம்- மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சாவு
- மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- படுகாயம் அடைந்த சுடலைமணி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சுடலைமணி (வயது 29). இவருக்கு கடந்த 2 வருடங்க ளுக்கு முன்பு திருமணமாகி குழந்தைகள் இல்லை.
இவர் இன்று அதிகாலை மானூர் அருகே உள்ள குத்தாலப்பேரி விலக்கு நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுடலைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுடலைமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.