ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு முலாம் பழம் வரத்து அதிகரிப்பு
- வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.
- சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.25 என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
ேசலம்:
சேலம் மாவட்டத்தில் தினமும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. முழுமையான கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 97 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. மதிய நேரங்களில் வெயில் தாக்கம் அதிகளவில் இருப்பதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்ப டுகிறது.
முலாம் பழம்
வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.
நடப்பாண்டில் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் முலாம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்கு முலாம் பழம் அறுவடை செய்து லாரிகளில் லோடு ஏற்றி சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது.
குவிப்பு
ஒரு கிலோ ரூ.25 என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். அதேபோல் சாலையோர கடைகளிலும் முலாம்பழம் அதிகளவில் குவித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.