உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Published On 2023-10-02 05:44 GMT   |   Update On 2023-10-02 05:44 GMT
  • நேற்று 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை அணையில் இருந்து 933 கன அடி வெளியேற்றப்படுகிறது.
  • பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து வரும் தமிழக - கேரள எல்லை வனப்பகுதிகளிலும், கேரளாவின் உள் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 822 கன அடி நீர் வந்த போது அணையின் நீர் மட்டம் 119.65 அடியாக இருந்தது. நேற்று வினாடிக்கு 1708 கன அடியாக இருந்த நீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் 120.25 அடியாக உயர்ந்தது. இன்று காலை அணைக்கு 2593 கன அடி நீர் வருகிறது.

இதனால் அணையின் நீர் மட்டம் 121.20 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை அணையில் இருந்து 933 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2886 மி.கன அடியாக உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நீர் திறப்பு அதிகரிப்பின் காரணமாக பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

71 அடி உயரமுள்ள வைகை அணை நீர் மட்டம் 48.69 அடியாக உள்ளது. நீர் வரத்து 139 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 1826 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.50 அடி. வரத்து 11 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 90.20 அடி. வரத்து 5 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 49.43 மி.கன அடி.

பெரியாறு 49.4, தேக்கடி 21.6, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 2.6, சண்முகாநதி அணை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News