உள்ளூர் செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.எம்.முகமதுஅபூபக்கர் பேட்டி அளித்த காட்சி

சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவளவிழா மாநாடு - முன்னாள் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் பேட்டி

Published On 2023-02-06 06:55 GMT   |   Update On 2023-02-06 06:55 GMT
  • தென்காசி மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தப்படும்.
  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய அளவிலான பவளவிழா மாநாடு மார்ச் 9 மற்றும் 10-ந் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

கடையநல்லூர்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.எம்.முகமதுஅபூபக்கர் கடையநல்லூரில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு எந்த உதவியும் செய்யாத மத்திய அரசு ,தற்போது அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப் போவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் வாக்கு வங்கியை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளது இந்த நிதிநிலை அறி க்கை. இதனால் எந்த சாமானியருக்கும் பயனில்லை. தென்காசி மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தப்படும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய அளவிலான பவளவிழா மாநாடு மார்ச் 9 மற்றும் 10-ந் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. முதல் நாள் அகில இந்திய அளவிலான முஸ்லிம் லீக்கின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. 2-ம் நாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர். 75-வது முஸ்லிம் லீக் பவள விழா மாநாட்டில் இந்தியாவில் உள்ள ஏழை- எளிய இஸ்லாமிய பெண்களுக்கு 75 பேருக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.2.25 கோடி மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறது.

இந்தாண்டு ஹஜ் புனித பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம். அதை மத்திய அரசு ஏற்று 1.75 லட்சம் பேர் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜித், தென்காசி மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், கடையநல்லூர் நகர தலைவர் செய்யது மசூது, முஸ்லிம் லீக் நகர மன்ற உறுப்பினர் அக்பர் அலி, மாநில பேச்சாளர் முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News