ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக சரிவு
- ஒகேனக்கிலில் நீர் வரத்து 8 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
- பரிசல் இயக்க 4-வது நாளாக தடை.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் தமிழகத்திற்கு நேற்று 3 ஆயிரம் கனஅடி அளவில் திறந்து விடப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீராலும் தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை, 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த தால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இருந்தபோதிலும், அங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, ஐவர்பாணி ஆகிய அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகளின் பாது காப்பு கருதி, ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்கு கடந்த 12-ந் தேதி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் குறைந்து வந்தபோதிலும், இன்று 4-வது நாளாக பரிசல் இயக்க தடை நீடித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.பின்னர் சுற்றுலா பயணிகள் எண்ணை மசாஜ் செய்து கொண்டு அருவி களில் குளித்து மகிழ்ந்தனர்.
பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டிருந்தால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் பரிசல் நிலையம், கடைவீதி, மீன் கடை ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.
கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து திறந்து விட படுவதால், பிலிக்குண்டு லுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்கா ணித்து வருகின்ற னர்.