உள்ளூர் செய்திகள்

நாகை மாவட்ட கூடுதல் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

Published On 2023-09-23 08:58 GMT   |   Update On 2023-09-23 08:58 GMT
  • 4 வீதிகளிலும் கடந்த ஒரு ஆண்டாக வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

வேதாரண்யம்:

நாகப்பட்டினம் மாவட்ட வணிகர் சங்க செயலாளர் திருமலை செந்தில் மற்றும் வணிகர் சங்க பொருளாளர் கந்தசாமி, வேதாரண்யம் நகர வணிகர் சங்க செயலாளர் முரளி ஆகியோர் மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம் நகர கடைத்தெருவில் உள்ள 4 வீதிகளிலும் கடந்த ஒரு ஆண்டாக வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நீண்ட நாட்கள் ஆகியும் முடியாததால் வணிகர்க ளுக்கும், பொதுமக்களுக்கும், அவ்வழியாக செல்லும் போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறாக உள்ளது.

எனவே, நெடுஞ்சாலை துறையினர் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று க்கொண்ட மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News