உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் ஆய்வு செய்தார். 

திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Published On 2023-01-11 08:44 GMT   |   Update On 2023-01-11 08:44 GMT
  • காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
  • அதனை தொடர்ந்து குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார்.

விழுப்புரம்:

திண்டிவனத்தில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அதன் படி திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர் போலீஸ் நிலையத்தை சுற்றி பார்வையிட்டு, காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்பு காவலர்கள் மத்தியில் பேசிய அவர் காவல் துறையினர் பொது மக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் பொதுமக்களிடம் கண்ணியமாகவும், பொறுமை யாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வாகன தணிக்கை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், காவலர்கள் தங்கள் உடல் நலனில் கவனம் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.மேலும் அதனை தொடர்ந்து குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார். அதன் பிறகு போலீஸ் நிலையம் வளாகத்தில் 10 தக்கும் மரக்கன்று நட்டு வைத்தார்.இதில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி,சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராசன்,பாக்கியலட்சுமி,தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ்,பயிற்சி சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் காவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News