பிள்ளையார்நத்தத்தில் காலை சிற்றுண்டி திட்ட பணிகள் ஆய்வு
- ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதால் அதற்கான முன்னேற்பாட்டு சோதனை முறை பயிற்சிகள் வழங்கப்பட்டது.
- உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் வரும் 27ம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்த உள்ளனர். இந்நிலையில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதால் அதற்கான முன்னேற்பாட்டு சோதனை முறை பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பிள்ளையார்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் நடந்த காலை சிற்றுண்டி தயாரிப்பு பயிற்சியின் போது, குழந்தைகளுக்கு வழங்க இருக்கும் உணவை ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமையிலான குழுவினர் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.
அருகில் மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன், துணைத் தலைவர் கவிதா மனோகர், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜகணேஷ், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் அருண், பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, உதவி ஆசிரியர் காமாட்சி, காலை சிற்றுண்டி உணவு தயாரிப்பாளர் முருகேஸ்வரி, ஊராட்சி மன்ற செயலர் அழகர்சாமி உட்பட பலர் இருந்தனர்.