உள்ளூர் செய்திகள் (District)

பள்ளி வாகனங்களை வருவாய்க் கோட்டாட்சியர் இளவரசி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

திருச்செங்கோட்டில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Published On 2022-06-10 08:57 GMT   |   Update On 2022-06-10 08:57 GMT
திருச்செங்கோட்டில் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

திருச்செங்கோடு:

ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு திருச்செங்கோடு வட்டம் வருவாய் கோட்டாட்சியர் இளவரசி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர்(பொறுப்பு) மாதேஸ்வரன், திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலர் பழனிச்சாமி மற்றும் டி.எஸ்.பி. சீனிவாசன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களை திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரி வளாகத்தில் ஆய்வு செய்தனர்

இதில் 350 பேருந்துகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. வேக கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டி உள்ளதா, அவசரகால வழி உள்ளதா, பேருந்தின் தளம் உறுதியாக உள்ளதா, பள்ளி மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் வகையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறைபாடு உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் அதனை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வருமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் மற்றொருநாள் ஆய்வு செய்யவுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த ஆய்வினை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திருச்செங்கோடு ராஜசேகர், குமாரபாளையம் ரவிக்குமார், நாமக்கல் பறக்கும்படை சரவணன் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News