உள்ளூர் செய்திகள்

பெருமாள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி தொடக்க பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ், கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

பெருமாள்புரம் தொடக்கப்பள்ளியில் கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு

Published On 2022-12-23 09:16 GMT   |   Update On 2022-12-23 09:16 GMT
  • பெருமாள்புரம் தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் கேட்டறிந்தார்.
  • மாணவர்களுடன் அமர்ந்து கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ், கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உணவு சாப்பிட்டனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் முழுமை யாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளருமான செல்வராஜ், கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று ஆய்வு செய்தார்.

காலை உணவு திட்டம்

அதன்படி மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவின் வகைகள் குறித்தும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்தார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ், கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உணவு சாப்பிட்டனர்.

சுகாதார நிலையத்தில் ஆய்வு

எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டறிந்து அப்பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக கற்ற கற்றல் திறனை கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்.

தொடர்ந்து பெரு மாள்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்து பொருட்கள் போதுமானதாக இருப்பு உள்ளதா? என்றும் நோயாளி களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News