ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் - பணிகள் முடங்குவதாக சமூக ஆர்வலர்கள் புகார்
- ஆலங்குளம் போலீஸ் உட்கோட்டத்தில் 7 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது
- நிரந்தரமாக இன்ஸ்பெக்டர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் உட்கோட்டத்தில் ஆலங்குளம், வி.கே.புதூர், ஊத்துமலை, சுரண்டை, பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட 7 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உட்கோட்டத்தின் தலைமையிடமான ஆலங் குளம் போலீஸ் நிலையத்தில் அண்டை கிராமங்களை சேர்ந்த புகார்கள் விசாரி க்கப்பட்டு வருகிறது.
வளர்ந்து வரக்கூடிய நகரமான ஆலங்குளத்தில் தினமும் வரும் புகார்களை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் இல்லை எனவும், நிரந்தரமாக நிய மிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், இங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அம்பை போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்ப ட்டார். அதன் பின்னர் கடந்த 2 மாதங்களாக ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் பொறுப்பு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் பொறுப்பு என்பதால் ஆலங்குளத்திற்கு அடிக்கடி வருவதில்லை.
இதனால் புகார்கள், கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களும் தன்னிச்சையாக செயல் படுவது போல் தோன்று கிறது. எனவே உட னடியாக இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என்றனர்.