சாலையோர வியாபாரிகள் சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்
- சான்றிதழ் உரிய வியாபாரிகளுக்கு சென்று சேரவில்லை.
- குடும்பத்தினர் போட்டோவுடன் விண்ணப்பித்து சான்றிதழ் பெறலாம்.
திருப்பூர் :
சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை சட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உரிய பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. திருப்பூரில் கடந்த 2ஆண்டுகள் முன் பெறப்பட்டது. அதில் 1,154 பேர் பதிவு செய்து கொண்டனர்.
தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சான்றிதழ் உரிய வியாபாரிகளுக்கு சென்று சேரவில்லை. பலரும் ஊரடங்கு காரணமாக தங்கள் வியாபாரத்தை விட்டு விட்டும் வேறு ஊர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்று விட்டனர். இதுவரை சான்றிதழ் பெறாத வியாபாரிகள் நேரில் சென்று மாநகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள்ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவற்றின் நகல் மற்றும் குடும்பத்தினர் போட்டோவுடன் விண்ணப்பித்து சான்றிதழ் பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.