உள்ளூர் செய்திகள்

ஏற்றுமதிக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மண்கூம்புகள்.

திண்டுக்கல் அருகே இயற்கை உரத்திற்கு மண்கூம்பு தயாரிக்கும் பணி தீவிரம் வெளியூர்களுக்கும் ஏற்றுமதி

Published On 2022-08-05 07:36 GMT   |   Update On 2022-08-05 07:36 GMT
  • திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டி பகுதியில் மண்கூம்புகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
  • மணல் நிரப்பி 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து பராமரித்து வருகின்றனர். 5 மாதத்தில் இயற்கை உரமாக மாறுகிறது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டி பகுதியில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதலில் நாட்டு மாடு கொம்பில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. நாளடைவில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததால் மண்கூம்பு மூலம் இயற்கை உரம் தயாரிக்க தொடங்கி உள்ளனர்.

இதில் மணல் நிரப்பி 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து பராமரித்து வருகின்றனர். 5 மாதத்தில் இயற்கை உரமாக மாறுகிறது. இந்த உரத்தை பயன்படுத்தினால் வேர் முடிச்சுகள் அதிகரிக்கும். பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கிடைக்கும். மேலும் விவசாய நிலங்களில் மண்புழு உள்ளிட்டவைகள் அதிகரிக்கும். இதன்மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.

தற்போது மண்கூம்பு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில்,

மண்கூம்பு தயாரிக்க களிமண் பிடித்து ஒரு வாரம் நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் 8 மணிநேரம் சூரிய ஒளியில் வைக்க வேண்டும். இதன்மூலம் இயற்கை உரம் தயாரித்தால் நல்ல மகசூல் கிடைக்கும். இதனை அறிந்து பெங்களூர், ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் மொத்தமாக வாங்கிச்செல்கின்றனர்.

இயற்கை உரம் என்பதால் எந்த உடல்நலக்கேடும் ஏற்படுவதில்லை. இதனால் இதற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. வாரத்திற்கு 2000-க்கும் மேற்பட்ட மண்கூம்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

Similar News