உள்ளூர் செய்திகள் (District)

மாணவர்களுக்கு காரில் வைத்து கஞ்சா விற்பனை கைதான என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் தீவிர விசாரணை

Published On 2022-10-23 08:30 GMT   |   Update On 2022-10-23 08:30 GMT
  • இவர் மேட்டூர், சேலம் கேம்ப், தங்கமாபுரிப்பட்டணம், குஞ்சாண்டியூர், புத்துசாம்பள்ளி பகுதிகளில் ஏஜெண்ட்டுகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
  • ஏஜெண்டுகளை கூண்டோடு பிடிக்க முடிவு.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் செல்போனில் தொடர்பு கொண்டால் இருக்கும் இடத்திற்கே வந்து கஞ்சா விற்கப்படுவதாக, மேட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேட்டூர் டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், எஸ்ஐ சேகர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கஞ்சா வியாபாரிகளின் செல்போன் எண்ணை கண்டுபிடித்த போலீசார், கல்லூரி மாணவர்கள் போல் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினர். சிறிது நேரத்தில் மேட்டூர் காவிரி பாலத்தில், சொகுசு காரில் வந்த டிப்டாப் உடையணிந்த நபர்கள், ரூ.1000 பெற்றுக் கொண்டு, காரில் இருந்தபடியே 2 பொட்டலம் கஞ்சாவை வீசி விட்டு செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு தயாராக இருந்த மேட்டூர் போலீசார், அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த சேலம் 5 ரோட்டை சேர்ந்த மனோகரன் மகன் விஜய்பரத் (வயது 28), மேட்டூர் குமரன் நகரைச் சேர்ந்த விக்னேஷ் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் விஜய்பரத் பி.இ. கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து விட்டு, சேலம் 5 ரோட்டில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். அவரது ஏஜெண்டாக செயல்பட்டு வரும் விக்னேஷ் (21) என்பவர், மேட்டூர் அனல் மின் நிலைய கண்காணிப்பு பொறியாளர் ஒருவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இருவரும் விற்பனைக்காக காரில் வைத்திருந்த தலா 25 கிராம் எடை ெகாண்ட 51 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜய்பரத் காரிமங்கலத்தை சேர்ந்த விஷ்வா என்பவரிடம் 4 கிலோ கஞ்சாவை கிலோ ரூ.4000-க்கு வாங்கி வந்து, 25 கிராம் எடை ெ காண்ட பொட்டலம் ரூ.500-க்கு விற்பனை ெ சய்து வந்துள்ளார். இவர் மேட்டூர், சேலம் கேம்ப், தங்கமாபுரிப்பட்டணம், குஞ்சாண்டியூர், புத்துசாம்பள்ளி பகுதிகளில் ஏஜெண்ட்டுகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

ஏெஜண்டுகளை கூண்டோடு கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கைது செய்யபட்ட இருவரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News