உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே மலைத்தேனீ கொட்டிய 5 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2023-04-10 05:30 GMT   |   Update On 2023-04-10 08:27 GMT
  • விவசாயிகள் மீது மலை தேனீ கொட்டி யதில் 5 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • கலாவதி (வயது 20). இவர் மாடு ஒட்டிக் வரும் வழியில் லட்சுமிபதி என்ப வரது நிலத்தின் அருகே மலைத்தேனீ கொட்டியது.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி ஒன்றியம் சே.கொளப்பாக்கம் கிராமத்தில் விவசாயிகள் மீது மலை தேனீ கொட்டி யதில் 5 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விக்கிரவாண்டியை அடுத்த செ.கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கலாவதி (வயது 20). இவர் மாடு ஒட்டிக் வரும் வழியில் லட்சுமிபதி என்ப வரது நிலத்தின் அருகே மலைத்தேனீ கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் கலாவதி சத்தம் போட்டார்.   அப்போது அதே பகுதியில் விவசாய வேலை பார்த்து விட்டு வீடு திரும்பிய பாபு (50), கிருஷ்ணமூர்த்தி (55), வெற்றிவேல் (29), முனியன் (50), அம்பிகா (50) ஆகியோர் கலாவதியை காப்பாற்ற முயற்சித்தனர். இதில் அவர்களையும் மலைத் தேனீ கொட்டியது.  இதையடுத்து இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News