அரசு கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
- அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- முடிவில் முனைவர் சாந்தி நன்றி கூறினார்.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தலைவர் வகித்து பேசினார்.
வரலாற்றுத் துறைத் தலைவர் கார்குழலி வரவேற்றார்.
அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள கிளாபின் பல்கலைக் கழகச் சமூகவியல் பேராசிரியர் முனைவர் சாலமன் செல்வம் கலந்து கொண்டு பாலினச் சமத்து வமின்மையின் தொடக்கமும் அதன் சமூகத்தாக்கமும் ஒரு வரலாற்று அணுகுமுறை என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கினார்.
பூண்டி புஷ்பம் கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் ரவிச்சந்திரன், மன்னர் சரபோஜி கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் கோவிந்தராஜ், திருச்சி தந்தைப் பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் சீதாலெட்சுமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கல்லூரியின் தேர்வு நெறியாளர் மலர்விழி, உள்தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் பானுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக முனைவர் பூங்கொடி கருத்தரங்க நோக்கவுரை வழங்கினார். முனைவர் மீனாட்சி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தன்னாட்சி, தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகியவற்றிலிருந்து பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். அனைவ ருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முடிவில் முனைவர் சாந்தி நன்றி கூறினார்.