உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்
- மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் சந்தானலட்சுமி, சாந்தி, பாரதி, சசிகலா, விமலா ரேகா, தனம் ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் கவிதா தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் சந்தானலட்சுமி, சாந்தி, பாரதி, சசிகலா, விமலா ரேகா, தனம் ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இணை அமைப்பாளர் ஹேமலதா வரவேற்றார். மாநில செயலாளர் கோதண்டபாணி தொடக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில செயலாளர் ஹேமலதா கலந்து கொண்டு சிங்க மங்கைகளே சீறி எழுக, சங்க உரிமைகளை மீட்டு பெறவே என்ற தலைப்பில் பேசினார்.
இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர் லதா நன்றி கூறினார்.