நாமக்கல்லில் ஆன்லைனில் மூதலீடு செய்து இழந்த ரூ.1 லட்சம் மீட்பு
- வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை நம்பி ஓடிபி எண்ணை கொடுத்தததால் அவருடைய கணக்கில் இருந்த ரூ.14,300 திருடப்பட்டது.
- இந்த பணத்தை சைபா் கிரைம் போலீசார் மீட்டனர். இதேபோல் ரூ. 20 லட்சம் மதிப்புடைய 103 செல்போன்களும் மீட்கப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல்லை சோ்ந்த சரவணன் என்பவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை நம்பி ஓடிபி எண்ணை கொடுத்தததால் அவருடைய கணக்கில் இருந்த ரூ.14,300 திருடப்பட்டது.
ஆன்லைனில் முதலீடு
இதேபோல், பரமத்தியை சோ்ந்த பாா்த்தசாரதி என்பவா் ஆன்லைனில் ரூ.35 ஆயிரம், தினேஷ் என்பவா் ரூ.11,010, மோகன்குமாா் என்பவா் ரூ.25,192, ராசிபுரத்தைச் சோ்ந்த நவீன்குமாா் ரூ.20 ஆயிரம் என ரூ.1.05 லட்சம் முதலீடு செய்து இழந்தனர்.
இந்த பணத்தை சைபா் கிரைம் போலீசார் மீட்டனர். இதேபோல் ரூ. 20 லட்சம் மதிப்புடைய 103 செல்போன்களும் மீட்கப்பட்டன.
இதனை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, புகார் தெரிவித்த நபர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தாா்.
ரூ.5,89,548 மீட்பு
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில் 2022-ம் ஆண்டில் இதுவரை மாவட்டத்தில் காணாமல்போன ரூ.1.50 கோடி மதிப்புள்ள 749 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இணையதளம் வழியில் இழந்த ரூ.5,89,548 மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இணையவழி தொடா்பான குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணில் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என்றார்.