உள்ளூர் செய்திகள்
- இந்திய விமானப்படையில் அக்னிவீர்வயு 2024-க்கு ஆட்சேர்ப்பு முகாம் இணையதளம் வாயிலாக நேற்று தொடங்கியது
- மாதிரி வினாத்தாள் மற்றும் ஏனைய விவரங்கள் இணையதள மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
இந்திய விமானப்படையில் அக்னிவீர்வயு 2024-க்கு ஆட்சேர்ப்பு முகாம் இணையதளம் வாயிலாக நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 17-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடிமகனாக உள்ள திருமணமாகாத ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் (வயது 17½ முதல் 21 வரை) பிறந்திருக்க வேண்டும். 10, +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிக்க வேண்டும்.
இணையவழி தேர்வு 13.10.2023 அன்று நடைபெறும். இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் மற்றும் ஏனைய விவரங்கள் இணையதள மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.