வள்ளியூர் சுற்றுவட்டாரத்தில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
- வள்ளியூர் பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக புகார்கள் வந்து கொண்டிருந்தது.
- திருட்டில் ஈடுபட்டது சுனில் , செல்வன்,ஜெபாஸ்டின் ஆகியோர் என்பது தெரியவந்தது.
வள்ளியூர்:
வள்ளியூர், பணகுடி, பழவூர், ராதாபுரம் மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக புகார்கள் வந்து கொண்டிருந்தது.
மோட்டார் சைக்கிள் திருட்டு
அதன்பேரில் திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் மேற்பார்வையில் வள்ளி யூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீஸ் காரர்கள் சுரேஷ் , லூர்து டேனியல் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் வள்ளியூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்கள் குமரி மாவட்டம் மயிலாடி புதூரை சேர்ந்த சுனில் (வயது 18), செல்வன் (32) மற்றும் கூத்தங்குழி மேலத்தெருவை சேர்ந்த ஜெபாஸ்டின் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள 22 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்த வள்ளியூர் சரக போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார்.