உள்ளூர் செய்திகள்

உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா? -கலெக்டர் ஆய்வு

Published On 2022-10-26 10:22 GMT   |   Update On 2022-10-26 10:22 GMT
  • ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில் தென்னை வணிக வளாக கட்டிட கட்டுமான பணிகள் ஆய்வு.
  • வணிக வளாகத்தின் மூலம் தினமும் 100 பேருக்கு வேலை.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்ட த்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம்

பட்டுக்கோட்டை தம்பி க்கோட்டை வடகாடு இறால் பண்ணைசெயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்ப ட்டது. பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மாற்று த்திறனாளிகள் முகாமில் சமையலறை, கழிவறை போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் சுகாதாரமாக உள்ளதா என்றும், மாற்று த்திறனா ளிகளின் கோரிக்கைகளை கேட்டறிய ப்பட்டது, மேலும் தம்பிக்கோட்டை வடகாடு நியாய விலை கடையில்

உணவுப் பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்தும், பொன்னவராயன் கோட்டையில் ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில் தென்னை வணிக வளாகம் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்த ப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வணிக வளாகத்தின் மூலம் தினமும் 100 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் உரிய

நடவடிக்கை எடுக்கப்ப டும் . இந்த வளாகத்தில் தேங்காய் பால் எண்ணெய் , தேங்காய் துருவல் பவுடர், குழந்தைகளுக்கான எண்ணெய், நார்ச்சத்து மாத்திரைகள் என தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஐந்து பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளன.

மேலும் ரூ.2.40 கோடியில் 500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு , தேங்காய்களை இறக்க பிளாட்பார்ம் ஆகியவை அமைப்பதற்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் முடிக்கப்பட்டு தென்னை வணிக வளாகம் விரைவில் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் .

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன் , சாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News