உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை கலெக்டர் ஆகாஷ் நேரில் ஆய்வு செய்த காட்சி.

செங்கோட்டை அருகே நீரோடைகளை மறித்து கட்டப்பட்ட தனியார் அருவிகளை அகற்றும் பணி - கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2022-08-27 08:56 GMT   |   Update On 2022-08-27 08:56 GMT
  • நீரோடைகளில் அணை கட்டி அதை நீர்வீழ்ச்சிகளாக கட்டண அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்தனர்.
  • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனியார் செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்றும் பணி தொடங்கியது.

கடையநல்லூர்:

செங்கோட்டை தாலுகாவில் உள்ள மேக்கரை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து வரும் நீரோடைகளில் அணை கட்டி அதை நீர்வீழ்ச்சிகளாக கட்டண அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்தனர்.

இதனால் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய நீர் மாசடைந்து காணப்படு வதாக விவசாய சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நீரோடைகளை மறித்து கட்டப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்ற மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 1-ந் தேதியில் இருந்து பல கட்டங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த பணியில் அதிகாரிகள் பாரபட்சம். காட்டுவதாகவும், கடந்த 2 தினங்களாக எந்த பணியும் நடைபெறாமல் இருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக சில முக்கிய பிரமுகர்களின் அழுத்தத்தின் காரணமாக அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனியார் செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்றும் பணி சிவகிரி மற்றும் செங்கோட்டை தாசில்தார்கள் முன்னி லையில் தொடங்கியது.

பாதுகாப்பு பணியில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட 35 நீர்வீழ்ச்சிகளில் இதுவரை 25 நீர்வீழ்ச்சிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று திடீரென கலெக்டர் ஆகாஷ் மற்றும் மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர்.

அப்போது கலெக்டர் பாரபட்சம் இல்லாமல் அனைத்து ஆக்கிரமிப்பு நீர்வீழ்ச்சிகளையும் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

Tags:    

Similar News