உள்ளூர் செய்திகள்

செஞ்சி வட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.

செஞ்சியில் ஜமாபந்தி: 22 கிராம பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர்

Published On 2023-06-08 07:43 GMT   |   Update On 2023-06-08 07:43 GMT
  • தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது.
  • விசுவநாதன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாசில்தார் அலு வலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டரும், மாவட்ட ஜமா பந்தி அலுவலருமான விசுவ நாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தாசில்தார் நெகருன்னிசா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நிகழ்ச்சியாக அக லூர், முக்குணம், தாமனூர், சின்னகரம், அருகாவூர், பணப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜமாபந்தி மேலாளர் கண்ணன் தனி தாசில்தார்கள் கோவிந்த ராஜ், மனோகரன் துணை தாசில்தார்கள் குணசேகரன், உமாமகேஸ்வரி, ரவி வட்ட வழங்கல் அலுவலர் வெங்க டேசன் வட்ட துணை ஆய்வாளர் முனியன் வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், பரமசிவம், பழனி, கார்த்திகேயன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று 22 கிராமங்களில் உள்ள பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மேலும் 22 கிராமங்களின் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து இன்று கள்ளப்புலியூர், மேலத்திப் பாக்கம், எடமலை, பென்னகர் உட்பட 20 கிராமங்களின் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட உள்ளன. ஜமா பந்தி வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Tags:    

Similar News