கோவையில் மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை
- அற்புதராஜ் மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
- 12 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கபணம் மாயமாகி இருந்தது.
கோவை,
கோவை அருகே உள்ள உப்பிலிபாளையம் கிருஷ்ணா கார்டனை சேர்ந்தவர் அற்புதராஜ்(வயது58).
இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அற்புதராஜ் தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கபணம், 3 வெள்ளி டம்ளர்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
சுற்றுலா முடிந்து வீட்டிற்கு திரும்பிய அற்புத ராஜ் கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.பின் னர் அவர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீ சில் புகார் அளித்தார்.
புகா ரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். மேலும் கைரேகை நிபு ணர்கள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரே கைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.