பீளமேடு அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளை
- சுரேஷ் கல்லூரி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
- 30 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது.
கோவை
கோவை பீளமேடு அருகே உள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது37). கல்லூரி பேராசிரியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது பேராசிரியர் சுரேஷ் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
வீட்டிற்கு திரும்பி சுரேஷ் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சுரேஷ் பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பேராசிரியர் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.