உள்ளூர் செய்திகள்

ராசிபுரத்தில் நகை கடை உரிமையாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

போலீசாருடன் நகைக் கடை உரிமையாளர்கள் வாக்குவாதம்

Published On 2022-11-22 09:26 GMT   |   Update On 2022-11-22 09:26 GMT
  • நகை திருடிய வழக்கில் கைதான பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு, நேற்று ராசிபுரத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு வந்தனர்.
  • பிரபல நகைக் கடையை அடையாளம் காட்டி, அங்கு தான் நகையை விற்றதாக கூறினார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீசார், நகை திருடிய வழக்கில் கைதான பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு, நேற்று ராசிபுரத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு வந்தனர்.

போலீசார் அழைத்து வந்த பெண், பிரபல நகைக் கடையை அடையாளம் காட்டி, அங்கு தான் நகையை விற்றதாக கூறினார்.

இதை–யடுத்து அந்த நகைக் கடைக்கு சென்ற பரமத்தி வேலூர் போலீசார், உரிமை–யாளரிடம் விசாரணை நடத்திட, அவரை அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த ராசிபுரத்தை சேர்ந்த மற்ற நகைக்கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் திரண்டு வந்தனர்.

அவர்கள், நகைக்கடை உரிமையாளரை அழைத்து செல்வதற்கு மறுப்பு தெரிவித்து, பரமத்தி வேலூர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ராசிபுரம் போலீசாரின் அனுமதி இல்லாமல், எப்படி நீங்கள் விசாரணை நடத்தலாம்? என பரமத்திவேலூர் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு திரண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் பரமத்தி வேலூர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து, திடீரென்று கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து ராசிபுரம் போலீசாரின் அறிவுறுத்தலின்படி, நகைக்கடை உரிமையா–ளர்கள் பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று டி.எஸ்.பி.யிடம் விளக்கம் அளித்தனர்.

Tags:    

Similar News