கல்லூரி மாணவர்களுக்கு பணிநியமன ஆணை
- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா மற்றும் கல்வி வழிகாட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது
- இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தேனி:
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா மற்றும் கல்வி வழிகாட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. உறவின்முறை தலை–வர் ராஜமோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி செயலாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
கல்லூரியில் வேலை–வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் அறிக்கையை சமர்ப்பித்தார். இதில் பன்னாட்டு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 70 இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு பணி–நியமன ஆணைகளை உறவின்முறை நிர்வாகி–கள் வழங்கினர். இதனை–தொடர்ந்து சமுதாய பணியில் சேவையாற்றி வரும் தலைமை ஆசிரி–யர்கள் மற்றும் பேராசிரி–யர்களுக்கு கல்வி வழிகாட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை துணைமுதல்வர் மாதவன், பேராசிரியர்கள் செய்திருந்தனர். கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் நன்றி கூறினார்.