கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அச்சத்துடன் பணிபுரியும் ஊழியர்கள்
- யூனியன் அலுவலகம் கட்டப்பட்டு 40 ஆண்டு களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் முறையான பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
- மேற்கூரை சேதமடைந்து காணப்படுவ தால் அதிகாரிகள் அச்சத்து டன் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் மயி லாடும்பாறை கிராமத்தில் கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் கட்டப்பட்டு40 ஆண்டு களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் முறையான பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
அதனால் அலுவலக கட்டிடம் அதிக அளவில் சேதமடைந்து காணப்படு கிறது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் கட்டி டத்தின் சில அறைகளுக்குள் மேற்கூரை வழியாக நீர்க்கசிவு ஏற்படுகிறது. அதனால் ஆவணங்கள் மழை நீரில் நனைந்து விடும் அபாயம் உள்ளது.
மேலும் மேற்கூரை சேதமடைந்து காணப்படுவ தால் அதிகாரிகள் அச்சத்து டன் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதேபோல அலுவலக கட்டிடத்தில் குறைந்த அறைகள் மட்டுமே உள்ளது. இதனால் பணியாளர்கள் இட நெருக்கடிக்கு மத்தியில் அமர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.
எனவே ஒன்றிய அலுவலகத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை எடுத்து கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே புதிய அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்க ப்பட வில்லை. மாவட்ட அதிகாரி கள் உரிய நடவ டிக்கை எடுத்து புதிய ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி களை விரை வில் தொடங்க வேண்டும் என பொது மக்கள் கோரி க்கை விடுத்து ள்ளனர்.