கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்
- இவ்விழாவில் பள்ளி மழலைகள் காமராஜர் போல் வேடம் அணிந்து கல்வி கண் திறந்த காம ராசரை பெருமைப்படுத்தினர்.
- இவ்விழாவை சிறப்பிக்க கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ் பட்டிமன்றத்தின் நடுவராக தலைமை தாங்கினார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர், ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வள்ளுவர் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் காமராஜரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் பள்ளி இயக்குநர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் இவ்விழாவை சிறப்பிக்க கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ் பட்டிமன்றத்தின் நடுவராக தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் வெற்றிவேல் செல்வம் நன்றி கூறினார்.
பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், ஏஞ்சலீனா, உமா தேவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பள்ளி மழலைகள் காமராஜர் போல் வேடம் அணிந்து கல்வி கண் திறந்த காமராசரை பெருமைப்படுத்தினர். மேலும் பள்ளியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர், இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.