உள்ளூர் செய்திகள்

கோவை பெண் டிரைவர் ஷர்மிளாவுக்கு வேலை - கனிமொழி எம்.பி. உறுதி

Published On 2023-06-23 13:05 GMT   |   Update On 2023-06-23 13:07 GMT
  • டிரைவராக வேலை பார்த்து வரும் ஷர்மிளாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
  • இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை:

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் நோக்கி செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர்தான் முதல் பெண் பஸ் டிரைவர். இதனால் இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்திப்பதற்காக அவர் இயக்கும் பஸ்சில் ஏறினார். பின்னர் அவரை நேரில் சந்தித்து அவருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதற்கிடையே, இன்று பிற்பகலில் தனியார் பஸ் டிரைவரான ஷர்மிளாவை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கனிமொழி எம்.பி. பஸ்சில் பயணித்தபோது டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து தொலைபேசியில் ஷர்மிளாவுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். அப்போது ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News