நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
- மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு
- நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து
நாகர்கோவில்:
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நாளை நடக்கிறது.
விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடும் அவர், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். குடியரசு தின விழாவில் 500 பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடக்கிறது.
இதையடுத்து போலீ சாரின் அணிவகுப்பு ஒத்தி கை நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது. இதில் போலீசார், தீயணைப்பு படையினர், என்.சி.சி. மாணவர் படை யினர் கலந்து கொண்ட னர். இதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
விழா நடைபெறும் மைதானத்தில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அண்ணா விளை யாட்டு அரங்க வாசலில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டு உள்ளது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குடியரசு தினத்தை ஒட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பணி யில் 1200 போலீசார் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர்.
நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிசனங்களுக் குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்றிரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. லாட்ஜ்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் தங்கி யுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு உள்ள வருகை பதிவேட்டை யும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள லாட்ஜிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட எல்லை பகுதி களில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வரு கிறது. அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி, களியக் காவிளை சோதனை சாவடி யில் போலீசார் கண் காணிப்பு பணியை மேற் கொண்டனர்.
கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். கடலோர காவல் படை போலீசாரும் கண் காணிப்பு பணியை மேற் கொண்டு வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக யாராவது சுற்றி திரிகிறார் களா? என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலை மையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் உடை மைகளை போலீசார் சோதனை செய்து வருகிறார் கள். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து வெளி யூர்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த பார்சல் களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை மேற்கொண்டனர்.
ரெயில் தண்டவாளங்களி லும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது. கன்னியா குமரி, நாங்கு நேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ரெயில் நிலையத்திலும் கூடுதல் போலீசார் பாது காப்பு பணிக்கு நியமிக்கப் பட்டுள்ளனர். நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது ரெயில்வே பாலங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களி லும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.