உள்ளூர் செய்திகள்

முறிந்து விழுந்த மரத்தை தீயணைக்கும் படையினர் வெட்டிஅகற்றிய போது எடுத்த படம்.

கொட்டாரம் அருகே நடுரோட்டில் 100ஆண்டு பழமைவாய்ந்த நாவல்மரம் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-01-31 07:30 GMT   |   Update On 2023-01-31 07:30 GMT
  • தீயணைக்கும் படையினர் போராடி அகற்றினர்
  • நேற்று மாலை “திடீர்” என்று சூறாவளி காற்று வீசியது

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் சந்திப்பில் இருந்து வட்டக்கோட் டைக்கு செல்லும் சாலையில் உள்ள லெட்சுமிபுரம் சந்திப்பில் 100ஆண்டு பழமை வாய்ந்த நாவல்மரம் ஒன்று உள்ளது.

இந்த மரத்தில் உள்ள ராட்சத மரக்கிளை நேற்று மாலை "திடீர்" என்று வீசிய சூறாவளி காற்றில் நடுரோட்டில் முறிந்து விழுந்தது. இந்த மரக்கிளை கொட்டாரம் சந்திப்பில் இருந்து வட்டகோட்டை செல்லும் சாலையும் கொட்டாரம் பெருமாள் புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் முன்புஇருந்து பொட்டல் குளம் செல்லும் சாலையும் சந்திக்கும் நான்கு முக்கு ரோடு சந்திப்பில் முறிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆனால் அந்தப் பகுதியில் மரம் முறிந்து விழும்போது எந்தவித வாகனங்களும் செல்லாததால்பெரும்உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல்அறிந்ததும் கன்னியாகுமரிதீயணைக் கும்படைவீரர்கள்சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று பல மணி நேரம்போராடி அந்த ராட்சத மரக்கிளை களை உடனடியாகவெட்டிஅப்புறப்படுத்தினார்கள்.

அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

Tags:    

Similar News