உள்ளூர் செய்திகள்

விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம் 

விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

Published On 2023-02-07 09:33 GMT   |   Update On 2023-02-07 09:33 GMT
  • இலவச வேட்டி-சேலை வழங்கிய விபரங்களை கேட்டறிந்தார்
  • பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்ட ராக பி.என். ஸ்ரீதர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து இன்று மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து விளவங் கோடு தாலுகா அலுவ லகத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.அப் போது விளவங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் எத்தனை ரேசன் கடைகள் உள்ளது? எத்தனை கிராம ஊராட்சிகள் உள்ளது? என்ற விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ரேசன் கடைகள் மூலமாக இலவச வேட்டி சேலை முறையாக வழங்கப பட்டு வருகிறதா? எத்தனை பேருக்கு வழங்கப் பட்டுள்ளது என்ற விவரங்க ளையும் கேட்டறிந்தார்.

பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது சப்- கலெக்டர் கவுஷிக், விளவங்கோடு தாசில்தார் பத்ம குமார், விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News