உள்ளூர் செய்திகள்

ரேசன் கடையில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்த காட்சி.

நாகர்கோவிலில் உள்ள ரேசன் கடைகளில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

Published On 2023-02-14 09:36 GMT   |   Update On 2023-02-14 09:36 GMT
  • இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளதா? என்ற விவரத்தை கேட்டறிந்தார்.
  • பொருட்களின் அளவு சரியாக வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு

நாகர்கோவில்:

நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ரேசன் கடையில் கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேசன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு நிலவரம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். அரிசி, பருப்பு, சீனி, மண்எண்ணை உள்ளிட்ட பொருட்கள் இருப்பு சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்த கலெக்டர் பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டார்.

மேலும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளதா? என்ற விவரத்தையும் கேட்ட றிந்தார். இதைத் தொடர்ந்து புதுகுடியிருப்பில் உள்ள ரேசன் கடைக்கு சென்ற கலெக்டர் ஸ்ரீதர் அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் அளவு சரியாக வழங்கப் பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். பொருட்களின் இருப்பு விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது சமூக பாதுகாப்பு தனி துணை ஆட்சியர் திருப்பதி, அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அணில் குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News