உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்த படம் 

ராணி தோட்டம் டெப்போ முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-05 09:56 GMT   |   Update On 2022-12-05 09:56 GMT
  • சேதமடைந்துள்ள பஸ்களை நீக்கிவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும்
  • கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

நாகர்கோவில்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பல பஸ்கள் சேதமடைந்துள்ளன. இவற்றை நீக்கிவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கண்ணன், தங்க மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் மோகன், ராஜ்குமார், ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News