கருங்கல் அருகே அனுமதியின்றி நடந்த ஜெபக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
- புகாரின்பேரில் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
- ஒலிபெருக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள சகாயநகர் பகுதியில் ஏராளமான வீடுகள் நெருக்கமாக உள்ளன. அப்பகுதியில் கிறிஸ்தவ ஆலயம், இந்து கோவில் போன்றவையும் உள்ளது. இருவேறு மதத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சகாயநகர் குன்னுவிளை பகுதியில் ஒருவர் புதிய வீடு ஒன்றை கட்டி ஜெபக்கூட்டம் நடத்தி உள்ளார். பலநாட்கள் ஜெபக்கூட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 9-ந் தேதி முதல் வெளி ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து ஒலிபெருக்கி வைத்து ஜெபக்கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டு கொள்ளா மல் நேற்று இரவு அந்த வீட்டில் எவ்வித அனுமதியும் இன்றி அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி வைத்து ஜெபக்கூட்டம் நடத்தி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வீட்டின் முன் அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர்.
இதுகுறித்து அப்பகு தியை சேர்ந்த வக்கீல் படுவூர் எட்வின் என்ற அருள் எட்வின் ஜெகம் என்பவர் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவ்வீட்டில் அனுமதியின்றி ஜெபகூட்டம் நடத்தியதும், அனுமதி யின்றி ஒலிபெருக்கி வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததும் தெரியவந்தது. எனவே ஜெபக்கூட்டம் நடத்தியதை நிறுத்தினர். மேலும் ஒலிபெருக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்ற னர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.