உள்ளூர் செய்திகள்
பறக்கை காடேற்றி கூறுடைய கண்டன் சாஸ்தா கோவிலில் புனரமைப்பு பணிகள்
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிதலமடைந்த 100 கோயில்களை புனரமைக்க ரூ 5.83 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிதலமடைந்த 100 கோயில்களை புனரமைக்க ரூ 5.83 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
தற்போது 100 கோவில்க ளிலும் புனரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.இதில் பறக்கை காடேற்றி கூறுடைய கண்டன் சாஸ்தா கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலில் வருடத்திற்கு 2 முறை அப்பகுதி விவசாயிகள், நெல் நடவு செய்யும்போதும் அறுவடை செய்யும் போதும் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்து வந்தனர். இதனை தமிழக அரசு புனரமைக்க உத்தரவிட்டு உள்ளது. அதன் பேரில் இன்று புனரமைப்புக்கான பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அற நிலையத்துறை பொறி யாளர் ராஜகுமார், கண்காணிப்பாளர் ஆனந்த், கோயில் மேலாளர் ஹரி பத்மநாபன் உள்பட பல கலந்து கொண்டனர்.