உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையம் முன்பு பஸ் நிறுத்தப்பட்டிருந்த போது எடுத்த படம் 

கோட்டாரில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு

Published On 2023-01-20 07:26 GMT   |   Update On 2023-01-20 07:26 GMT
  • போலீஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி சோதனை
  • சம்பள பணத்தை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என்று கூறி கதறி அழுதார்.

நாகர்கோவில்:

அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் லிடியா (வயது 28).

இவர், நாகர்கோவிலில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை லிடியா வழக்கம்போல் வேலைக்கு வந்தார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல தயாரானார். இதையடுத்து அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் சம்பள பணம் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. பணத்தை லிடியா தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

வடசேரியில் இருந்து கூட்டப்புளி செல்லும் பஸ்சில் லிடியா ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் லிடியா கைப்பையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. இதையடுத்து அவர் கூச்சலிட்டார் தனது பணத்தை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என்று கூறி கதறி அழுதார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

பின்னர் பஸ் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து போலீசார் பஸ்சில் இருந்த பயணிகள் ஒவ்வொருவரிடமும் சோதனை செய்தனர்.ஆனால் பணம் கிடைக்க வில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு பஸ் மீண்டும் கூட்டபுளிக்கு புறப்பட்டு சென்றது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி லிடியாவிடம் பணம் பறித்தது பெண் கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவே கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு அண்ணா பஸ் நிலையத்தில் ஓடும் பஸ்சில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது.

இது தொடர்பாக சில பெண்களை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் மீண்டும் ஓடும் பஸ்சில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

எனவே இந்த சம்பவத்தில் பழைய கொள்ளையர்க ளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News