அம்ருத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது குடிநீர் கட்டணம் உயரும்
- 4 மண்டல அலுவலகங்களும் விரைவில் திறக்கப்படும்
- மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மகேஷ் பேச்சு
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் ஆனந்தமோகன், பொறி யாளர் பாலசுப்பிரமணி யன்,மண்டல தலைவர் கள் செல்வகுமார், ஜவகர், முத்துராமன், அகஸ் டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் மீனா தேவ் அக் ஷயா கண்ணன், அனிலா சுகுமாரன், டி ஆர். செல்வம், நவீன் குமார் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது:-
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தூய்மை பணி யாளர்கள் தட்டுப்பாடு உள்ளது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். அண்ணா விளையாட்டு அரங்கத்தை சீரமைக்க மாநகராட்சி நிதியை ஒதுக்க கூடாது. குடிநீர் வசதி மட்டும் மாநகராட்சியில் இருந்து செய்து கொடுக்க வேண்டும்.
நாகர்கோவில் மாநக ராட்சியில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சிறிய தெருக்களுக்கும் அதிக வரி வசூல் செய்யப்படுகிறது. நாகர்கோவில் மாநகர பகுதி யில் சாலைகளை ஆக்கிர மித்து சந்தை உள்ளது. இதில் உள்ள கடைகளில் தனியார் வாடகை வசூல் செய்து வருகிறார்கள். ஆனால் அதில் உள்ள குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள்.
வறுமை கோடு பட்டி யலில் பல்வேறு குளறு படிகள் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். வறுமை க்கோடு பட்டியலில் உள்ள குளறுபடி காரணமாக பென்ஷன் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படு கிறார்கள். அதை உடனடி யாக சரி செய்ய வேண்டும்.
புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து மாநகர பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளூர், தெங்கம்புதூர் பகுதியில் குடிநீர் கட்ட ணத்தை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் பேசிய தாவது:-
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம், கலெக்டரின் பொது நிதியிலிருந்து தான் சீரமைக்கப்பட்டு வருகிறது. அக்னிபாத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு நடந்த போது சீரமைக்க ப்பட்டது. மாநகராட்சி நிதியிலிருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படவில்லை.
நாகர்கோவில் மாந கராட்சி மண்டல அலுவ லகங்கள் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மாநகராட்சி புதிய அலு வலக கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வருகை தர உள்ளார்.
புதிய கட்டிடத்தில் மாநகராட்சி அலுவலகம் செயல்படும்போது ஆளூர், தெங்கம்புதூர் தற்பொழுது செயல்படும் மாநகராட்சி அலுவலகத்தில்மண்டல அலுவலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வரி விதிப்பில் குளறு படிகள் இருந்தால் அதை சரி செய்ய உடனடி நட வடிக்கை எடுக்கப்படும்.
புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.காண்ட்ராக்டரிடம் போதிய நிதி இல்லாததால் இந்த பணிகள் மெதுவாக நடை பெற்று வருகிறது. தினமும் 300 பணியாளர்கள் பணி யில் ஈடுபட்டால் 2 மாத காலத்திற்குள் அந்த பணியை முடிக்க முடியும்.அந்த குடிநீர் திட்ட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ராமன் புதூர், கணேசபுரம் பகுதியில் தனியார் சந்தைகள் செயல் பட்டு வருகிறது. அந்த சந்தைகளை ஆய்வு செய்து அதில் பிரச்சினைகள் இருந்தால் மாநகராட்சி மூலம் நோட்டீசு அனுப்பப்பட்டு அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க ப்படும்.
மாநகர பகுதியில் சாலை சீரமைப்பிற்கு ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதி 52 வார்டு கவுன்சிலர்களுக்கும் பாரபட்சமின்றி சமமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ரூ.10 கோடி நிதி மண் ரோடு சீரமைக்க ஒதுக்கி உள்ளோம்.
52 வார்டுகளில் 13 வார்டு களில் மண் ரோடுகள் இல்லை. மீதமுள்ள அந்த வார்டுகளுக்கு ரூ.10 கோடி நிதி பிரித்தளிக்கப்பட்டு பணிகள் விரைவில் மேற் கொள்ளப்படும்.
தமிழகத்திலேயே நாகர் கோவில் மாநகராட்சிக்கு தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பணிகள் ஒரு வார காலத்திற்குள் தொடங்க ப்படும்.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் குடிநீர் கட்ட ணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை. அம்ருத் திட்டம் முடிவடைந்தவுடன் நாகர் கோவில் மாநகரப் பகுதி யிலும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும். அப்போது அனைத்து பகுதிகளுக்கும் ஒரே கட்டணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.