உள்ளூர் செய்திகள்

10,000 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட சமபந்தி விருந்து

Published On 2023-11-25 07:37 GMT   |   Update On 2023-11-25 07:37 GMT
  • கிறிஸ்து நகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடந்தது
  • இரவு கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நாகர்கோவில் :

நாகர்கோவில் கிறிஸ்து நகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் குடும்ப விழாவையொட்டி முதல் நாளில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப்பலியுடன் தொடங்கிய பூஜையில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு ஜெபமாலைகள், திருப்பலிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் 23-ந்தேதி குமரி மண்ணில் தோன்றிய புனிதர் தேவசகாயமே என்ற பிரம்மாண்ட நாடகம் நடந்தது. இதில் ஏராளமான நடிகர்கள் பங்கேற்று நடித்துக்காட்டினர்.

நேற்று இரவு சமபந்தி விருந்து நடைபெற்றது. இதை பங்குத்தந்தை டோனி ஜெரோம் தொடங்கி வைத்தார். இணை பங்குத்தந்தை விஜில் ப்ரைட், துணை தலைவர், டென்னிஸ் பிராங்கிளின், செயலாளர் சார்லட் மேரி, பங்கு பேரவை பொருளாளர் இர்வின் ஜியோ நேவிஸ், துணை செயலாளர் சகாய ஞான திரவியம் மற்றும் பங்கு அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இந்த சமபந்தி விருந்தில் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இன்று (25-ந்தேதி) காலை 10 மணிக்கு நோயாளிகள் திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மாலை ஆராதனையும், தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட செயலாளர் அருட்பணி மரிய கிளாட்ஸ்டன், அருட்பணி ஜெனிபர் எடிசன் மறையுரை ஆற்றுகிறார்கள். இன்று மாலையில் கிறிஸ்து அரசர் தேர் பவனி நடைபெறுகிறது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

நாளை (26-ந்தேதி) 10-ம் நாள் திருவிழாவான காலை 7.30 மணிக்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியும், ஆயர் நசரேத் சூசை மறையுரையும் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி நடைபெறுகிறது. இரவு கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Tags:    

Similar News