உள்ளூர் செய்திகள் (District)

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-09-22 09:50 GMT   |   Update On 2022-09-22 09:50 GMT
  • கஞ்சா வியாபாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள்
  • குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 15-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளனர்‌ . இரணியல் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஸ் (வயது 24) கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சகாய கவின் (24) இவர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டச்சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பிரதீஸ், சகாய கவின் இருவ ரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே மண்டைக்காடு போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News