உள்ளூர் செய்திகள்

வடசேரியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது - 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்

Published On 2022-12-15 06:57 GMT   |   Update On 2022-12-15 06:57 GMT
  • வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் வடசேரி பஸ் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
  • தப்பி ஓடிய நபர் மாடன் கோவில் தெரு சேர்ந்த சஜின் என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் கள். கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப் டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் வடசேரி பஸ் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக வாலிபர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் தப்பி ஓடினார்கள். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர். 3 பேர் பிடிப்பட்ட நிலையில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட 3 பேரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது அவர்கள் வடசேரியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 32) மாடன் கோவில் தெருவை சேர்ந்த மிக்கேல்ராஜ் (46 )ரமேஷ் ராஜா (32) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

தப்பி ஓடிய நபர் மாடன் கோவில் தெரு சேர்ந்த சஜின் என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News