உள்ளூர் செய்திகள்

புத்தேரி ஆதிபராசக்தி பீடத்தில் ஆடிப்பூரம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு 3 நாள் சிறப்பு வழிபாடு

Published On 2022-07-30 07:24 GMT   |   Update On 2022-07-30 07:24 GMT
  • பக்தர்கள் விரதமிருந்து தலையில் கஞ்சி கலசத்தை சுமந்து திருக்கோவிலை வலம் வந்து அம்மனை வழிபட்டு வழிபாடு
  • ஏற்பாடுகளை சக்தி பீட பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

நாகர்கோவில் புத்தேரி மருதாச்சலம் காவு ஸ்ரீ தேவி துர்கா ஆதிபராசக்தி பீடத்தில் ஆடிப்பூரம் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வருகிற திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாட்கள் தொடர்ந்து சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. ஆடி பூரத்தை முன்னிட்டு வருகிற திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், திருப்பள்ளி எழுச்சி, தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்று காலை பக்தர்கள் பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு கஞ்சி கலச வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அப்போது பக்தர்கள் விரதமிருந்து தலையில் கஞ்சி கலசத்தை சுமந்து திருக்கோவிலை வலம் வந்து அம்மனை வழிபட்டு வழிபாடு செய்கின்றனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு வில்லு பாட்டு நிகழ்ச்சியும். பிற்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும் பின்னர் அன்னதானமும் நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு கூட்டு வழிபாடு மாலை 4 மணிக்கு பால் அபிஷேகம் நிறைவு பெறுதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து மகா குங்கும அர்ச்சனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடும், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 10 மணிக்கு அத்தாள பூஜை நிகழ்ச்சியும் நடக்கிறது.

2-ம் நாளான செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, சிறப்பு அபிஷேகம், தீபாரதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்படுகிறது. பிற்பகல் 12 மணிக்கு உச்ச கால அலங்கார தீபாராதனை நடைபெறும். மதியம் 3 மணிக்கு ராகு கால துர்கா பூஜையும் மாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அத்தாளபூஜை உடன் நிறைவடைகிறது. 3-ம் நாளான புதன்கிழமை ஆடி பெருக்கை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, அபிஷேகம், தீபாராதனையும், கூட்டு வழிபாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 11 மணிக்கு சுமங்கலி பூஜையும் அதனை தொடர்ந்து சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பிற்பகல் 12 மணிக்கு உச்சகால அலங்கார தீபாராதனையும் பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்படும். மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 10 மணிக்கு அத்தாள பூஜை உடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை சக்தி பீட பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News