உள்ளூர் செய்திகள் (District)

நாகர்கோவிலில் கஞ்சா வழக்கில் கைதான 5 பேர் ஜெயிலில் அடைப்பு

Published On 2022-08-26 10:24 GMT   |   Update On 2022-08-26 10:24 GMT
  • சென்னையில் இருந்து வாங்கி வந்து சப்ளை செய்தது அம்பலம்
  • கைது செய்யப்பட்ட 5 பேரின் வங்கி கணக்குகளையும் முடக்க போலீசார் நடவடிக்கை

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை விற்பனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை யிலான போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். வெளியூர்களிலிருந்து கொண்டு வரப்படும் கஞ்சாக்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா சிக்கியது.

மேலும் மாவட்டம் முழு வதும் கஞ்சா விற்பனை செய்ததாக 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கோட்டார் போலீசார் ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தே கப்படும்படியாக நின்ற 5 பேரை பிடித்து விசாரித்த னர். விசாரணையில் அவர் கள் இடலாக்குடியைச் சேர்ந்த இர்பான் (வயது 20), சாபிக் (21), ஆஸ்லாம் (25), முகமது முசரப் (20) வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த விமல் என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து 800 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போது கஞ்சாவை சென்னையிலிருந்து வாங்கி வந்து குமரி மாவட்டத்தில் சிறு சிறு பொட்டலங்களாக சப்ளை செய்வதாக கூறினார்கள்.

கைது செய்யப்பட்ட 5 பேரின் வங்கி கணக்குகளையும் முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News