உள்ளூர் செய்திகள் (District)

தக்கலை வியாபாரி வீட்டில் 65 பவுன் - ரூ. 2½ லட்சம் கொள்ளை

Published On 2022-07-04 07:20 GMT   |   Update On 2022-07-04 07:20 GMT
  • 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை
  • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு தடயங்களை சேகரித்தனர்.

தக்கலை:

தக்கலை அருகே உள்ள ஈத்தவிளையை அடுத்த செக்கடிவிளை பகுதியை சேர்ந்தவர் சோமன் (வயது55), வாழைக்காய் வியாபாரி.

இவர் நேற்று காலை மனைவி மற்றும் மகளு டன் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.அவர்கள் வீட்டின் பீரோ வையும் உடைத்து அதில் இருந்த 65 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

ஆலயத்தில் இருந்து வீடு திரும்பிய சோமன் மற்றும் குடும்பத்தினர் நகை - பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கொற்றி கோடு போலீஸ் நிலையத்தில் சோமன் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு தடய ங்களை சேகரித்தனர். மோப்ப நாய் கொண்டு வரப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணே சன் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தி னார். வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்ட பின்னரே கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பதால், தெரிந்த நபர்கள் யாரும் இதில் ஈடுபட்டு இருக்க லாம் என போலீசார் சந்தேகிக்கி ன்றனர்.

இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள ப்பன் மற்றும் ரசல்ராஜ் தலைமையில் அமைக்கபட்டுள்ள தனிப்படையினர் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உள்ளூர் கொள்ளையர்களா? வட மாநில கொள்ளை யர்களா? என விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையர்கள் கேரளா தப்பி செல்ல முயற்சிக்காத வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News