உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே பத்திரம் எழுத்தர் தவற விட்ட பணத்தை போலீசில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்

Published On 2023-11-21 07:50 GMT   |   Update On 2023-11-21 07:50 GMT
  • 17-ந்தேதி இரணியல் கோர்ட் அருகில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
  • பணத்தை எண்ணியபோது ரூ. 5 ஆயிரத்தை காணவில்லை

இரணியல் :

இரணியல் அருகே உள்ள மைலோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 46). பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17-ந்தேதி இரணியல் கோர்ட் அருகில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். பணத்தை பாக்கெட்டில் வைத்த அவர் வேலைக்கு சென்றுவிட்டார். அங்கு வைத்து பணத்தை எண்ணியபோது ரூ. 5 ஆயிரத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நெய்யூர் முரசன்கோடு பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் விஜின் (20) கல்லூரி தேர்வு எழுதிவிட்டு அரசு பேருந்தில் வந்து இரணியல் கோர்ட் பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது கீழே ரூ.5 ஆயிரம் கிடப்பதை பார்த்துள்ளார். அதனையடுத்து போலீஸ் நிலையத்தில் பணத்தை கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறி சென்றுவிட்டார்.

இதனிடையே நேற்று காலை பணத்தை இழந்த ராஜேஷ்குமார் இரணியல் போலீஸ் நிலையம் வந்தார். உரிய விசாரணைக்குப்பின், அவரிடம் இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் முன்னிலையில் விஜின் ஒப்படைத்தார். கீழே கிடந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த விஜினுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது

Tags:    

Similar News