உள்ளூர் செய்திகள்

புத்தேரியில் கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி கமிஷனர் ஆனந்த்மோகன் ஆகியோர் ஆய்வு நடத்திய காட்சி.

சைக்கிளிங், நடை பயிற்சி சாலை அமைத்து புத்தேரி குளத்தை சுற்றுலா மையமாக்க திட்டம்

Published On 2022-11-18 10:08 GMT   |   Update On 2022-11-18 10:08 GMT
  • அதிகாரிகளுடன், கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு
  • குளத்தில் போர்ட் ரெஸ்டாரண்ட் அமைப்பது தொடர்பாக ஆலோசனை

நாகர்கோவில்:

நாகர்கோவில் புத்தேரி குளத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் அரவிந்த் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குளத்தை தூர்வாரி அதை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகனுடன் ஆலோசனை நடத்தினார்.

புத்தேரி குளத்தை தூர்வாரி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் வாக்கிங் செல்ல வசதியாக நடை பாதை அமைப்பது தொடர்பாகவும், அங்கு சைக்கிளிங் செல்ல வசதி ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோ சிக்கப்பட்டது.

இதுபோல குளத்தில் போர்ட் ரெஸ்டாரண்ட் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.இதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ரூ‌.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் கட்டமாக இதற்கு ரூ.1 கோடியே 6 லட்சம் நிதி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வின்போது பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா ஆகியோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து வடசேரியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News