உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

Published On 2022-07-03 07:48 GMT   |   Update On 2022-07-03 07:48 GMT
  • நாளை மறுநாள் நடக்கிறது
  • கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்குமுந்தைய பழமையான கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டிஉள்ளதாக வரலாற்றுச் சான்றுகள்கூறுகின்றன.

குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை இங்கு வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணம் ஆயிற்று.

இங்கு உள்ள மூலவரான குகநாதீஸ்வரர் மிக உயரமான 5½ அடி உயர சிவலிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். அப்படிப்பட்ட புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று ஆனி திருமஞ்சன விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழா நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடக்கி றது.

இதையொட்டி நாளை மறுநாள் காலை 9 மணிக்கு நடராஜபெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும்சி றப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர்9-45மணிக்கு வாகன பவனிநடக்கிறது.

பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி மேளதாளங்கள்முழங்க கோவிலை சுற்றிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

அதன் பின்னர் பகல் 12மணிக்கு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநா தீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை யினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News