நாகர்கோவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.72 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம் இன்று திறப்பு - காணொளி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ரூ .72 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது
நாகர்கோவில் :
நாகர்கோவில் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.72 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதனை இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்அரவிந்த், நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்பயனாக புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரூ .72 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. இதற்காக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் சார்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்என்றார் .
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்பிரமிளா, மண்டல தலை வர்கள் ஜவஹர், அகஸ்டினா கோகிலவாணி, தி.மு.க. மீனவர் அணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், வக்கீ ல்சதாசிவம், ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.